தென்மாவட்ட ரெயில்களை தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கக்கூடாது பயணிகள் சங்கம் எதிர்ப்பு
ரெயில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் தாம்பரம் முனையத்தில் இருந்து தென்மாவட்ட ரெயில்களை இயக்கக்கூடாது என்று பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டால் தென்மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் சிரமமும், காலவிரயமும் ஏற்படும். இதனால் தென்மாவட்ட ரெயில்களை எழும்பூரில் இருந்தே இயக்க வேண்டும். மாறாக விரைவில் வர உள்ள தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கக்கூடாது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.எழும்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரெயில்களை, தண்டையார்பேட்டையில் 111 ஏக்கர் ரெயில்வே நிலத்தில் புதிய முனையம் ஒன்றை அமைத்து அதில் இருந்து இயக்க வேண்டும். இதனால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நெரிசல் குறைக்கப்படுவதுடன், எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களும் இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story