ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதன்மை தேர்வு காரணமாக மெட்ரோ ரெயில் இன்று காலை 6 மணி முதல் இயக்கம்


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதன்மை தேர்வு காரணமாக மெட்ரோ ரெயில் இன்று காலை 6 மணி முதல் இயக்கம்
x
தினத்தந்தி 17 Jun 2017 9:45 PM GMT (Updated: 17 Jun 2017 8:01 PM GMT)

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதன்மை தேர்வு காரணமாக மெட்ரோ ரெயில் இன்று காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற ஆட்சிப் பணிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் 72 நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடக்கிறது. தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் தேர்வு மையங்கள் இருக்கும் பகுதிக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

அதேபோல் சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம்-ஆலந்தூர், ஷெனாய் நகர்-பரங்கிமலை மற்றும் சின்னமலை-விமானநிலையம் இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலை 8 மணிக்கு தான் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். ஆனால் இன்று தேர்வு நடக்க இருப்பதால் மாணவர்களுக்கு வசதியாக காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

Next Story