தமிழகத்தில் ரூ.2 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் பொன்.ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் ரூ.2 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 18 Jun 2017 3:30 AM IST (Updated: 18 Jun 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ரூ.2 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி தொடக்க விழா சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள துறைமுக ஊழியர்களுக்கான எம்.பி.டி. குடியிருப்பு வளாக அரசு பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

பின்னர் சிறப்புரையாற்றும் போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் 1,14,000 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதனை 2 லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள 12 துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் சென்னையில் அமைந்துள்ளன. நாடு முழுவதும் மேலும் 6 துறைமுகங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2 துறைமுகங்கள் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றன. அதன்படி இனயத்தில் அமையும் துறைமுகத்துடன், சீர்காழி துறைமுகத்தை மேம்படுத்தவும் திட்டம் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள் மூலம் 647 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. இது 1054 மில்லியன் டன்னாக உயர்த்தப்படும். இதற்காக துறைமுகங்களின் சக்திகளை அதிகப்படுத்த சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசு ரூ.8 லட்சம் கோடி மதிப்பில் ‘சாதுமாரா’ எனப்படும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதில் ரூ.2 லட்சம் கோடி தமிழகத்திற்கு செலவிடப்படும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story