3 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நீடித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும் பொன்.ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும் என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை,
மத்திய பாரதீய ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி விழா வேலூர் ரங்காபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகம் நிறுவனம் சார்பில் இந்த விழா நடந்தது.
பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகள் குறித்த காணொலி காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தி.மு.க. சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் இவ்வளவு அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தி.மு.க.வில் யாரும் சேரவில்லை. அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால், தி.மு.க. காணாமல் போய் விடும்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை ஆட்சி கலைப்பில் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும். காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போன்று தற்போதைய முதல்-அமைச்சர்கள் வேகமாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் பா.ஜ.க.வால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story