எடப்பாடி பழனிசாமி நேர்மையாக சந்திக்க வேண்டும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


எடப்பாடி பழனிசாமி நேர்மையாக சந்திக்க வேண்டும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 19 Jun 2017 12:44 AM IST (Updated: 19 Jun 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுக்கு பணம் வழங்கியதற்காக வழக்கு பதிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி நேர்மையாக சந்திக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்,

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கருத்தரங்கம், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வழக்குப்பதிவு செய்தால், அதனை அவர் நேர்மையாக சந்திக்க வேண்டும். மேலும், அரசுக்கு ஆதரவு அளிப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுக்கான ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல, குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களின் அடிப்படையில் அவசர கதியில் ஆட்சியை கலைக்க முடியாது. இது குறித்து கோர்ட்டு விசாரணை நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story