குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ,எம்.பிக்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்-மீராகுமார்


குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ,எம்.பிக்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்-மீராகுமார்
x
தினத்தந்தி 1 July 2017 8:41 PM IST (Updated: 1 July 2017 8:41 PM IST)
t-max-icont-min-icon

மதசார்பின்மை,சமூக நீதிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார் என மீராகுமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை எம்.ஆர்.சி.நகர் உள்ள தனியார் ஓட்டலில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் ஆதரவு கோரும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.

அதனைதொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

சமூக நீதி மற்றும் ஜனநாயக் மரபுகளை காப்பதில் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திமுக தலைவர் கருணாநிதி. கடந்த சில நாட்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடந்துள்ளன. மதசார்பின்மை,சமூக நீதிக்கு மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்.

ஊடக சுதந்திரம்,பேச்சுரிமைக்காக போராடி வருகிறேன்.ஜனநாயகத்தின் மீது மதிப்பை கொண்டது தமிழகம். தமிழ்நாடு எப்போதும் சமூக நீதிக்காக போராடும் மாநிலம். ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ,எம்.பிக்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.

17 கட்சிகள் சேர்ந்து என்னை குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி உள்ளன. 17 கட்சிகள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story