சரக்கு–சேவை வரி விதிப்பில் குறைகள் உள்ளன தம்பிதுரை பேட்டி


சரக்கு–சேவை வரி விதிப்பில் குறைகள் உள்ளன தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 3 July 2017 12:45 AM IST (Updated: 2 July 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு–சேவை வரி விதிப்பில் குறைகள் உள்ளன என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைகூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதாவை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பிறகு பாரத பிரதமர் மோடி, ஜெயலலிதாவிடம் பேசி இந்த வரி விதிப்பால் தமிழகத்தின் நிதி நிலைமை எந்த காரணம் கொண்டும் பாதிக்கப்படாது என்று உறுதி அளித்தார். அதன் பிறகு மசோதாவை அ.தி.மு.க. ஆதரித்தது.

இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில குறைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பட்டாசு உள்பட பல பொருட்களுக்கு வரி விதிப்பில் குறைகள் உள்ளன. ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைகளை தீர்க்க அ.தி.மு.க. பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, அந்த குறைகளை தீர்க்க பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story