உயர் சிறப்பு மருத்துவ இடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு: மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல் ஜி.கே.வாசன் கண்டனம்


உயர் சிறப்பு மருத்துவ இடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு: மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல் ஜி.கே.வாசன் கண்டனம்
x
தினத்தந்தி 3 July 2017 1:00 AM IST (Updated: 3 July 2017 12:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாநில அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து வந்தது.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாநில அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து வந்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 192 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்கள் இடம்பெற்றனர். ஆனால் ‘நீட்’ தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதால், தற்போது உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 100 சதவீத ஒதுக்கீட்டை மத்திய அரசே நிரப்ப முடிவெடுத்துள்ளது.

இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற செயலாகும். இதுதொடர்பாக டாக்டர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே தமிழக அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், முனைப்புடன் செயல்பட்டு மாநில உரிமையை நிலைநாட்டவேண்டும்.

தமிழக அரசு இந்த படிப்பு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும். மேலும் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்து, தீர்மானம் நிறைவேற்றி, தமிழக மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story