3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று கூடுகிறது
சட்டசபை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது.
சென்னை,
சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் 14–ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து வனம், சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, மின்சாரம், மதுவிலக்கு, நகராட்சி, உள்ளாட்சி, சட்டம், சுற்றுலா, தொழில்துறை, சிறு, குறு தொழில், சத்துணவு, மாற்றுத்திறனாளிகள், நெடுஞ்சாலை, பொதுப்பணி, கைத்தறி, கதர் கிராம தொழில் ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சட்டசபைக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனை தொடர்ந்து, வீட்டு வசதி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

Related Tags :
Next Story