1,114 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்


1,114 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
x
தினத்தந்தி 3 July 2017 12:52 AM IST (Updated: 3 July 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை,

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமனம் பெற்று, இன்னும் பணியில் சேராதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி வேலையில்லாத ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நிலையில் 1,114 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டு உள்ளது.

யார், யார் தேர்வானார்கள்? என்ற விவரம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Next Story