சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வங்கிக்கடன்


சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வங்கிக்கடன்
x
தினத்தந்தி 4 July 2017 3:45 AM IST (Updated: 3 July 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110–விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:–

ஊரக பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கும், பயிற்சிகள் அளிப்பதற்கும், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சி நடத்தி விற்பனை செய்வதற்கும் ஏதுவாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடங்கள் தலா 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1000 கட்டிடங்கள் 600 கோடி ரூபாயில் கட்டப்படும்.

சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் பெற்றுத் தருவதன் வாயிலாக பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையவும் மற்றும் கடன் சுமைகளிலிருந்து விடுபடவும் வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கென கடந்த 6 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 32,848 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story