கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது: முதல் அமைச்சர் பழனிச்சாமி
கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று முதல் அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ அன்பழகன், கோடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “ கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கனகராஜ் கூட்டு சதியில் ஈடுபட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். கோடநாடு பங்களாவில் கை கடிகாரம், அலங்கார பொருட்கள் மட்டுமே கொள்ளை போயுள்ளது. கொள்ளையடிக்க முயன்றவர்கள் விரைவாக கைது செய்யப்பட்டுள்ளனர். கோடநாடு வழக்கில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story