தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைவு எடப்பாடி பழனிசாமி தகவல்


தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைவு எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 6 July 2017 5:45 PM GMT (Updated: 6 July 2017 3:43 PM GMT)

சட்டசபையில் நேற்று நடைபெற்ற காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல் தொகுதி) பேசினார்.

சென்னை,

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–

உறுப்பினர் பிரின்ஸ்:– போலீசாரின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் இல்லை. எனவே, தக்க பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அவர்களுக்கு வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– 18 மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் 2.4 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே நடந்துள்ளது.

உறுப்பினர் பிரின்ஸ்:– தமிழ்நாட்டில் அதிக அளவு போராட்டம் நடைபெறுகின்றன.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– இது ஜனநாயக நாடு. எதிர்ப்பை யாரும் தெரிவிக்கலாம். அதனால், அதிக அளவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

உறுப்பினர் பிரின்ஸ்:– போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– போலீசாருக்கு மன அழுத்தம் குறைய தக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.  இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story