அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது - அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 7 July 2017 7:21 PM IST (Updated: 7 July 2017 7:21 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

திருச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது. மத்திய அரசிடம் ரூ.17 ஆயிரம் கோடி நிதி வரவேண்டி உள்ளதால் மோடியை சந்தித்து வருகிறோம். கட்சியில் இருந்து சிலர் பிரிந்து சென்றதால் கட்சி பிளவுபட்டதாக அர்த்தமில்லை. அதிமுகவின் 3 அணிகளும் மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது முட்டாள்தனமானது. தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி தான் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story