காமராஜர் ஆட்சி அமைப்பதே இலக்கு: ராகுல்காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம்


காமராஜர் ஆட்சி அமைப்பதே இலக்கு: ராகுல்காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 11 July 2017 4:45 AM IST (Updated: 11 July 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி விரைவில் தமிழக சுற்றுப்பயணம் வர உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளை விடுவிக்கவேண்டும், மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், மீனவரணி மாநில தலைவர் டி.சபீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அரசு தானாக கலையும்

ஆர்ப்பாட்டத்தின்போது சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:–

காமராஜர் ஆட்சியை இலக்காக கொண்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி விரைவில் தமிழக சுற்றுப்பயணம் வர இருக்கிறார். தமிழக மக்கள் மீது அதிக அன்பு கொண்டுள்ள அவர் இனிமேல் அடிக்கடி தமிழகத்துக்கு வருவார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் மீட்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற கட்சிகளுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story