தனியார் பள்ளிகளுக்கு டிசம்பருக்குள் கல்வி கட்டணம் நிர்ணயம் நீதிபதி டி.வி.மாசிலாமணி பேட்டி
தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று நீதிபதி டி.வி.மாசிலாமணி தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் தனியார் நர்சரி பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 11 ஆயிரம் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அந்த பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதனையடுத்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது.
தொடர்ந்து சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி தலைமையில் கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கும் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சம்பள பட்டியல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பித்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது.
இந்த கல்வி கட்டணம் 2017-2018-ம் கல்வி ஆண்டுக்கு தனியாகவும், 2018-2019-ம் கல்வி ஆண்டுக்கு தனியாகவும், 2019-2020 கல்வி ஆண்டுக்கு தனியாக என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் நிர்ணயித்த கட்டணத்தை விட அடுத்த ஆண்டு 10 சதவீதம் அதிகமாகவும், அதற்கு அடுத்த ஆண்டு அதை விட 10 சதவீதம் கூடுதலாகவும் இருக்கும்.
கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளுக்கு கட்டண விவரத்தை விரைவில் இ.மெயிலில் அனுப்ப உள்ளோம். சம்பந்தப்பட்ட பள்ளிகள் புதிய கட்டண விவரம் கிடைத்த உடன், அதுதொடர்பான விவரத்தை பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் ஒட்டவேண்டும்.
தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து கல்வி கட்டணம் நிர்ணயித்து வருகிறோம். சென்னை மாவட்டத்தில் அந்த பணி முடிந்துவிட்டது. திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயித்து வருகிறோம்.
வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story