காங்கிரஸ் தலைமையிலான துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி மம்தா வாழ்த்து
காங்கிரஸ் தலைமையிலான துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணகாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தும் வேட்பாளரை முடிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள பாராளுமன்ற இல்லத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு சோனியா காந்தி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியை (மகாத்மா காந்தியின் பேரன்) தேர்ந்தெடுத்து உள்ளன என்றார்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், கோபால கிருஷ்ணகாந்தியின் பெயர் மட்டுமே பரிசீலிக்கப்பட்டது. அவருடைய பெயரை திரிணாமுல் காங்கிரஸ் பரிந்துரை செய்தது. இதை மற்ற கட்சிகள் ஆமோதித்தன.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் ஒருமனதாக கோபால கிருஷ்ண காந்தியை தேர்வு செய்ததை தொடர்ந்து அவருக்கு தொலைபேசி மூலம் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.

Related Tags :
Next Story