சிறைச்சாலைகளில் மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது மு.க.ஸ்டாலின் பேட்டி


சிறைச்சாலைகளில் மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது மு.க.ஸ்டாலின் பேட்டி
x

சிறைச்சாலைகளில் மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டசபை வளாகத்தில் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு சசிகலா சார்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து, சிறப்பு சமையல் அறை வசதி செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்து, மு.க.ஸ்டாலின் கூறியதாவது:–

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, சிறப்பு வசதிகள் செய்து கொண்டதாக, பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே, மணல் மாபியா கும்பல் தலைவர் சேகர் ரெட்டி, இப்போது ஜாமீன் பெற்றுள்ளார், அவரை கொலை செய்ய சிறையில் இருப்பவர்களே திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சிறை அதிகாரிகளே எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து, சேகர் ரெட்டியே டி.ஜி.பி., கமி‌ஷனர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அவரை கொல்ல முயற்சிக்கும் காரணம் என்னவென்றால், அவர் உயிரோடு இருந்தால், பல விவகாரங்கள், பல செய்திகள் எல்லாம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் தான் என்று ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

சிறைச்சாலைகளில் மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story