சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சமூக வலைத்தளத்தில் சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரசன்னா என்பவரது தாயார் இறந்துவிட்டதால், அவரை பரோலில் விட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட்டின் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி புழல் சிறை அதிகாரிகள், பிரசன்னாவை விடுவிக்கவில்லை.
அதிகாரிகளின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் தகவல் தொடர்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததால், பிரசன்னா விடுவிக்கப்பட்டார். அதேநேரம், சிறை அதிகாரிகளும், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினர்.
இந்த நிலையில், நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் உள்ள தகவல் தொடர்பு குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘மத்திய அரசின் நவீன சிறை விதிமுறைகள் தமிழக சிறைகளில் அமலில் உள்ளதா?, 7 முதல் 14 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள கைதிகள் குறித்து மாநில அறிவுரைக்கழகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?, தமிழக சிறைகளில் உள்ள ஆண், பெண் கைதிகள் எத்தனை பேர்?, கைதிகள் திருந்தி வாழ சிறைகளில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ‘கவுன்சிலிங்’ நடத்தப்படுகிறதா? என்று அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஆர்.ராஜரத்தினத்திடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், ‘தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக அரசிடம் இந்த விவரங்களை கேட்டு தெரிவிக்கிறேன்’ என்றார்.
இதற்கிடையில், டாஸ்மா மதுபான கடை, திருமுல்லைவாயலில் ஒரு வீட்டின் ‘கார் பார்க்கிங்’ பகுதியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ளதாக கூறி சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அரசு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
‘தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தினந்தோறும் நடத்திவரும் போராட்டங்களை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. அரசியல் கட்சிகளைப்போல அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டம் நடத்துவதில்லை. மதுவுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி பெற்று போராடுகின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும். படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
‘சமுதாயத்தில் மதுபானம் விஷம் போல கலந்துவிட்டது. பள்ளி சிறுவர்கள் பஸ், ஏறி இறங்கும் இடத்தில் கூட மதுபான கடைகளும், பார்களும் உள்ளன. சமீபகாலமாக சிறுவர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, மது குடிப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுபோன்ற காட்சிகள் வெளியானால், அதுதொடர்பாக யாராவது புகார் செய்வார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கக்கூடாது.
போலீசார் தாமாக முன்வந்து அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘அவ்வாறு இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை’ என்றார். இதையடுத்து, திருமுல்லைவாயலில் கார் பார்க்கிங் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது குறித்தும், சிறைகளில் தற்போது உள்ள கைதிகளின் நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Tags :
Next Story