திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயம் ஆக்கக்கூடாது மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 41 படைக்கல தொழிற்சாலைகள் உள்ளன.
சென்னை, ஜூலை.15–
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 41 படைக்கல தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 4 தொழிற்சாலைகளில் இலகுரக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையும் ஒன்று.
தனியார் நிறுவனங்களிடம் வாகனங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை முடிவு எடுத்ததால், ஜபல்பூர் ராணுவ வாகன தயாரிப்பு தொழிற்சாலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
அதேபோன்று திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இதனை நம்பி வாழும் 5 கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் மத்திய அரசு பாதுகாப்புத்துறை நிறுவனங்களை திட்டமிட்டே செயல் இழக்க செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
நிதி ஆயோக் பரிந்துரைகளை ஏற்று, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Related Tags :
Next Story