சென்னையில், டாக்டர் ராமதாஸ் கட்சி கொடி ஏற்றுகிறார் பா.ம.க. 29–வது ஆண்டு விழா நாளை நடக்கிறது


சென்னையில், டாக்டர் ராமதாஸ் கட்சி கொடி ஏற்றுகிறார் பா.ம.க. 29–வது ஆண்டு விழா நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 15 July 2017 12:45 AM IST (Updated: 14 July 2017 11:47 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில், டாக்டர் ராமதாஸ் கட்சி கொடி ஏற்றுகிறார் பா.ம.க. 29–வது ஆண்டு விழா நாளை நடக்கிறது

சென்னை,

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பா.ம.க. 29–வது ஆண்டு விழா 16–ந் தேதி (நாளை) தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்க உள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

16–ந் தேதி வேலூர் மேல்மொணவூரில் நடைபெறும் பா.ம.க.வின் 29–வது ஆண்டு தொடக்கவிழா மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூட சட்டப்படியான நடவடிக்கை எடுத்ததற்கான பிரமாண்டமான பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. 29–வது ஆண்டு விழா கட்சி கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story