3 மாத வாடகையை மட்டுமே, அட்வான்ஸ் தொகையாக உரிமையாளர்கள் வாங்க வேண்டும்-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்


3 மாத வாடகையை மட்டுமே, அட்வான்ஸ் தொகையாக உரிமையாளர்கள் வாங்க வேண்டும்-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x

3 மாத வாடகையை மட்டுமே, அட்வான்ஸ் தொகையாக உரிமையாளர்கள் வாங்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் இடையே போடப்படும் ஒப்பந்தத்தின்படி வீட்டு வாடகை நிர்ணயம் செய்யப்படும் என சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

வாடகை ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் வழங்கப்படும். முறையாக பதிவு செய்யாமல், வீடுகளை வாடகைக்கு விட முடியாது. புதிய வாடகை நிர்ணய சட்ட மசோதாவால் குடியிருப்பவர்கள், உரிமையாளர்கள் இருவருக்குமே சட்ட பாதுகாப்பு.  பிரச்சனைகளை விசாரித்து 30 நாட்களுக்குள் அதிகாரிகள் தீர்வு காண்பர்.  3 மாத வாடகையை மட்டுமே, அட்வான்ஸ் தொகையாக உரிமையாளர்கள் வாங்க வேண்டும். வீடுகளை பழுது பார்க்கும் பணிகள் குறித்து வரையரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story