பள்ளிக்கூட பாடத்திட்டம் தயாரிக்க பூர்வாங்க பணிகள் தொடங்கின
தமிழகத்தில் பள்ளிக்கூட பாடத்திட்டம் தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின. 6 மாதங்களில் 4 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயார் ஆகிவிடும்.
சென்னை,
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பல வருடங்களாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதையொட்டி 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதிதாக பாடத்திட்டம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில் உறுப்பினர் செயலாளராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக் குனர் க.அறிவொளி இருக்கிறார்.
புதிய பாடத்திட்டம் தயாரிக்க ஏற்கனவே பாடப்புத்தகம் எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட வல்லுனர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் குழுக்களாக தனித்தனி அறைகளில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பாடத்திட்டம் தயாரிப்பதற்கான பூர்வாங்கபணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்கவுண்டன்சி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை வல்லுனர்கள் எழுத உள்ளனர். சுற்றுச்சூழல், சாலைபாதுகாப்பு, நீர்மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, குழந்தைகள் உரிமை, மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடம் எழுதுபவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எப்படி பாடத்திட்டம் தயாரித்துள்ளனர்? ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள்? வெளிநாடுகளில் எவ்வாறு பாடத்திட்டம் தயாரித்துள்ளனர்? தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்தை எப்படி ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்? என்பதை இணையதளத்தில் பார்த்து வருகிறார்கள். மாணவர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைய உள்ளது.
அடுத்த கட்டமாக பாடத்திட்டம் எழுதும் வல்லுனர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
புதிதாக தயாரிக்கப்படும் பாடத்திட்டம் 2018-2019-ம் கல்வி ஆண்டில் 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகிய 4 வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ற வகையில் இன்னும் 6 மாதங்களில் பாடத்திட்டம் தயார் ஆகிவிடும்.
2019-2020-ம் கல்வி ஆண்டில் 2-வது வகுப்பு, 7-வது வகுப்பு, 10-வது வகுப்பு, பிளஸ்-2 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். எனவே அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரித்த பின்னர் பிளஸ்-2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை தயாரிக்கப்படும்.
புதிய பாடத்திட்டம் தயாரித்த பின்னர் தான் எப்படி பாடம் நடத்தலாம் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம், இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.) ஆகியவற்றின் சார்பில் பயிற்சி நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் இப்போது 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மீதம் உள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story