சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள்:  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2017 8:28 PM GMT (Updated: 2017-07-16T01:57:56+05:30)

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகரில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

விருதுநகர்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகரில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை நிருபர்கள் சந்தித்து, பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சலுகை காட்டப்பட்டதாக வந்த புகார் பற்றி கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இதுதொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை வெளிவந்த பின்பு தான் இதுபற்றி கருத்து கூற முடியும்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசை அணுகியோ அல்லது சட்டபூர்வமாகவோ உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது” என்றார்.

Next Story