ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார் அப்போலோ பிரதாப் ரெட்டி


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார் அப்போலோ பிரதாப் ரெட்டி
x
தினத்தந்தி 18 July 2017 8:52 AM GMT (Updated: 2017-07-18T14:22:41+05:30)

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதை எதிர்கொள்ளத் தயார் என்று அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னை

அப்போலோ மருத்துவமனை தலைவர்  பிரதாப் ரெட்டி கூறியதாவது:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை. அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது யாரும் தலையிடவில்லை. மருத்துவக் குழு அமைக்கப்பட்டதில் மட்டும் ஜெயலலிதா குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அவருக்கு மிகவும் வெளிப்படையாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதுதொடர்பான எல்லா மருத்துவ ஆவணங்களும் தயாராக உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ளத் தயார் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story