மாணவர்களுக்கு இலவச லேப்–டாப் வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்


மாணவர்களுக்கு இலவச லேப்–டாப் வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
x
தினத்தந்தி 18 July 2017 10:15 PM GMT (Updated: 18 July 2017 6:56 PM GMT)

சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), ‘கடந்த ஆண்டு பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கு இலவச லேப்–டாப் வழங்கப்படவில்லை.

சென்னை,

இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். லேப்–டாப் வழங்கப்பட்டு இருந்தால் கல்லூரிகளில் கணினி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்து இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.


Next Story