அமைச்சர்கள் மீது விமர்சனம்: ‘கமல்ஹாசன் கருத்து மக்களின் பிரதிபலிப்பு’
அ.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
ஜெயலலிதா ஏற்படுத்திய அரசுக்கு மக்கள் மத்தியில் அவமானம் ஏற்படும் வகையில் அமைச்சர்களை நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்தது மக்களின் பிரதிபலிப்பே ஆகும்.
அரசு முற்றிலும் செயல் இழந்த பொம்மை அரசாக செயல்படுவதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் சக்தி ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி ஆகும். மக்களால் தற்போது உள்ள அமைச்சர்கள் விரைவில் தூக்கி எறியப்படுவார்கள். அமைச்சர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படும் காலம் வர உள்ளது.
நடிகர் கமல்ஹாசனை கடுமையாக அமைச்சர்கள் தாக்கி பேசியதற்கு எனது கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஜனநாயகத்தில் கமல்ஹாசன் போன்றவர்களின் கருத்துகள் தொடர்ந்து வெளிவர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் பொருட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.