எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர், கருணாநிதி ஓர் உதாரணம் - ஸ்டாலின்
எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர், கருணாநிதி ஓர் உதாரணம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர், கருணாநிதி ஓர் உதாரணம். எம்ஜிஆர் ஆட்சியில் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நட்பு பாராட்டி வந்தனர். மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் தமிழை கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு என்று பெயர் பெற்ற பொன்விழாவை கொண்டாடக் கூடிய நேரம் இது. குளங்களை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் தூர்வாரும் பணியை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story