கமல்ஹாசனை இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி


கமல்ஹாசனை இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 22 July 2017 12:15 AM IST (Updated: 21 July 2017 10:35 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனை இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி

ஆலந்தூர், 

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படாததால் மாணவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளான பின்னர், இப்போது பிரதமரை சென்று பார்த்து உள்ளனர். இவர்கள் ஓராண்டுக்கு விலக்கு கேட்டு உள்ளார்களா? அல்லது ‘நீட்’ தேர்வே தமிழகத்துக்கு தேவை இல்லை என்று கேட்டு உள்ளார்களா? என்ற தெளிவான விவரங்கள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி மீது எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை.

தி.மு.க. மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள், செயல் தலைவர் இருக்கிறார். எங்களுக்கு வேறு யாரும் தேவை இல்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி இயங்கக் கூடியவர் இல்லை. யாரையும் இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. இத்தனை ஆண்டுகாலமாக தி.மு.க. யாருடைய உதவியும் இல்லாமல் தான் செயல்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு தி.மு.க. உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story