தினமும் தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
பொதுமக்கள் தினமும் 2 முறை தம்மை நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
எடப்பாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தினமும் 2 முறை தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்
முதல்-அமைச்சராக இருந்தாலும் தமது அன்றாட நடவடிக்கையில் மாற்றம் இல்லை. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக பிரதமரை இரு முறை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அம்மா உணவக திட்டம் சேவை மனப்பான்மையுடன் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது; அதில் லாப நஷ்டம் பற்றி கவலையில்லை. சட்டம் ஒழுங்கை சீர் குலைப்போர்கள் மீது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story