‘நீட்’ தேர்வில் விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


‘நீட்’ தேர்வில் விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Aug 2017 1:00 AM IST (Updated: 31 July 2017 10:58 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு தமிழக அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை ஐகோர்ட்டு மீண்டும் தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ, வியப்போ ஏற்படவில்லை. மாறாக, மத்திய, மாநில அரசுகள் செய்த துரோகத்தால் பாதிக்கப்பட்ட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு நீதியே கிடைக்காதா? என்ற வேதனை தான் மேலோங்கி நிற்கிறது.

அதேநேரத்தில் தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் செய்த தவறுகளுக்காக மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என்பதை மத்திய அரசும், நீதிமன்றங்களும் சிந்திக்க வேண்டும்.

இப்போது உள்ள நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும். உடனடியாக இதை தமிழக அரசு செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு பினாமி எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story