பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து முதல்–அமைச்சர் முடிவு செய்வார் சட்டத்துறை அமைச்சர்
பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து முதல்–அமைச்சர் முடிவு செய்வார் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சென்னை,
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் எந்தவித தடையும் இல்லை, என்பதால் அவரை பரோலில் விடுவிப்பது குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிவிப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தினார். அதேபோன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரை பரோலில் விடுவிக்க வேண்டு என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கைக்கு சட்டசபையில் பதில் அளித்து பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த பிரச்சினை குறித்து சட்டத் துறையின் ஆலோசனையை பெற்று, நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கடலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி. நிகழ்ச்சியை புறக்கணித்தது, மற்றும் தினகரன் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட போவதாக அறிவித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதே கோரிக்கையின் அடிப்படையில் முதல்–அமைச்சர், சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் கூறி இருந்தார். சட்ட நிபுணர்களுடன் நான் (சி.வி.சண்முகம்) ஆலோசனை நடத்தினேன்.
அவரை பரோலில் விடுவிப்பதற்கு சட்டத்தில் எந்தவித தடையும் இல்லை. அவரை பரோலில் விடுவது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக சட்டத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர், அதே கடிதத்தை தமிழக முதல்–அமைச்சருக்கு அனுப்பி உள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story