பொதுச்செயலாளர் இல்லாத சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது டிடிவி தினகரன்


பொதுச்செயலாளர் இல்லாத சூழ்நிலையில்  நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 1 Aug 2017 12:21 PM IST (Updated: 1 Aug 2017 12:21 PM IST)
t-max-icont-min-icon

பொதுச்செயலாளர் இல்லாத சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என அ.தி.மு.க (அம்மா) அணியின் துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

சென்னை

அ.தி.மு.க (அம்மா) அணியின் துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர கூறியதாவது:-

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளேன். தொண்டனாக மட்டுமல்ல; துணைப் பொதுச்செயலாளராகவும் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது.

அமைச்சர்கள் சிலர் எதோ பயத்தில் பேசி வருகிறார்கள். அவர்கள் அச்சத்தில் இருந்து மீண்டு வருவார்கள் என நம்புகிறேன். நான் யாருக்கும் போட்டியாக இருக்க மாட்டேன்.

பொதுச்செயலாளர் இல்லாத சூழ்நிலையில்  நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது.பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் உள்ளதால் செயல்படுத்த வேண்டிய இடத்தில் நான் உள்ளேன்.

 கமல் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசை விமர்சிக்கலாம் ஆனால் ஆதாரத்தை காட்ட வேண்டும்.அமைச்சர்களும் அரசியல் ரீதியாக பதில் அளிக்க வேண்டும். ஒருமையில் பேசக்கூடாது.

தமிழக மக்களின் நலன் கருதி மத்திய அரசு மூலம் திட்டங்களை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும். 

மக்களை பெரிதும் எல்பிஜி மானியம் ரத்து, ரேஷன் பொருட்கள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story