ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் ஏற்படவில்லை - நடராஜன்


ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் ஏற்படவில்லை - நடராஜன்
x
தினத்தந்தி 1 Aug 2017 12:37 PM IST (Updated: 1 Aug 2017 12:36 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் ஏற்படவில்லை என நடராஜன் கூறி உள்ளார்.

சென்னை

புதிய பார்வை ஆசிரியர்  நடராஜன் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் ஏற்படவில்லை. "நேருவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் வரும் என்று பலர் கூறிவந்தனர். ஆனால் லால் பகதூர் சாஸ்திரி என்ற தலைவர் வந்தார்.அதே போல இந்திரா காந்திக்கு பிறகு யாரும் காங்கிரசில் இல்லை என்று பேசப்பட்டது. ஆனால் எங்கிருந்தோ ராஜீவ் காந்தி வந்து ஆட்சி செய்தார்.

அதேபோல், தமிழகத்திலும் காமராஜருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு, எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெற்றிடம் ஏற்படும் என்று பேசப்பட்டது. அடுத்தடுத்த தலைவர்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.

புதிய தலைவர்கள் இனி பிறக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். அது மக்களுக்கு தெரியும்" என கூறினார் நடராஜன்.

பின் வாசல் வழியாக யாரும் ஆட்சி நடத்த நாங்கள் விட மாட்டோம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story