அ.தி.மு.க.வை அதிகம் எதிர்ப்பது பா.ம.க. தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
அ.தி.மு.க.வை அதிகம் எதிர்ப்பது பா.ம.க. தான். துரைமுருகனுக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதைக் கண்டித்து மக்களுடன் இறங்கி போராடாமல் தி.மு.க. அமைதி காப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்காமல் முதன்மை செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், பெட்ரோலிய மண்டலத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் அனுமதி கொடுக்கப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறுவதில் உண்மையில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அடுத்த சில வரிகளில் தமிழகத்திற்கு முதலீடு வர வேண்டும் என்பதற்காகத் தான் இத்திட்டத்திற்கு ஆய்வு நடத்த கருணாநிதி அனுமதி கொடுத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. எது எப்படியாகினும் இத்திட்டத்திற்கு தி.மு.க. தான் ஆய்வு அனுமதி அளித்தது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்த பாவத்தையும், துரோகத்தையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.
துரைமுருகன் கும்பகர்ண உறக்கத்திலிருந்து இப்போது தான் விழித்திருப்பதாலோ என்னவோ அவருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை.
2011–ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ம.க. வெளியிட்ட அறிக்கைகள், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றின் பட்டியலை நான் தருகிறேன். தி.மு.க. வெளியிட்ட அறிக்கைகள், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை துரைமுருகன் கொண்டு வரட்டும். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். அ.தி.மு.க.வை அதிகம் எதிர்த்தது பா.ம.க. தான் என்றால் செயல்தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா?
அன்புமணியின் புல்லட் பயணம் ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் ஆட்டோவில் தொங்கியும் ஏற்படுத்த முடியவில்லையே என்று புகைவது அல்ல என்பதை மு.க.ஸ்டாலினுக்கு, தி.மு.க.வின் வருங்கால பொருளாளர் துரைமுருகன் எடுத்துக்கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story