வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக 4¾ லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை,
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களை சேர்ப்பதற்காக கடந்த ஒரு மாதம் சிறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகள் ஜூலை 31–ந் தேதியுடன் முடிவடைந்தன.
இந்தப் பணிகளின்போது ஆன்லைன் மூலம் 51 ஆயிரத்து 566 விண்ணப்பங்களும், நேரடியாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 132 விண்ணப்பங்களும் சேர்த்து மொத்த 2 லட்சத்து 66 ஆயிரத்து 698 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இளைஞர்கள் தவிர மற்ற வாக்காளர்களிடம் இருந்து 2 லட்சத்து 8 ஆயிரத்து 244 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன்படி, அனைத்து வயதுடைய வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 942 ஆகும்.
இதில் 1–ந் தேதிவரை, ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை 3 லட்சத்து 58 ஆயிரத்து 743 ஆகும்.
ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில், இறந்து போனவர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 797 பேரின் பெயர் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 83 ஆயிரத்து 744 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story