ரெயில்வே மந்திரியுடன், பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு


ரெயில்வே மந்திரியுடன், பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
x
தினத்தந்தி 3 Aug 2017 12:30 AM IST (Updated: 2 Aug 2017 11:31 PM IST)
t-max-icont-min-icon

மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

சென்னை,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

அப்போது அவர் கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை புதிய ரெயில் சேவை தொடங்க வேண்டும், புனே முதல் திருநெல்வேலி வரையிலான வாராந்திர ரெயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். வாரம் இருமுறை இயங்கும் அம்சபார் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரெயில் சேவையை தொடங்கி டெல்லி முதல் கன்னியாகுமரி வரை இயக்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story