கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
கோவையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான வாலிபர் கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை,
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், சசிகுமார் கொலையில் கோவையைச் சேர்ந்த முபாரக் (37), சதாம் (27) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் தலைமறைவாக இருந்து வருவதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் குறித்து துப்புக்கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வாலிபர் கைது
இதற்கிடையே, சதாம், கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் தலைமறைவாக இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சதாமை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முபாரக், சதாம் உள்பட 4 பேர் திட்டம் தீட்டி சசிகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோர்ட்டில் ஆஜர்
மேலும் கைதான சதாமை போலீசார் கோவை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினார்கள். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சதாமை வருகிற 16-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதாமை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story