முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை கமல்ஹாசன் டுவிட்டரில் புதிய கருத்து


முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை கமல்ஹாசன் டுவிட்டரில் புதிய கருத்து
x
தினத்தந்தி 3 Aug 2017 3:30 AM IST (Updated: 3 Aug 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசன் தற்போது மீண்டும் புதிய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக விஷயங்கள் பற்றி பேசிய அவர் தற்போது ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக அவர் குறை கூறினார்.

இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழல் ஆதாரங்களை திரட்டி அவர்களின் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர்களின் முகவரிகளையும் டுவிட்டரில் வெளியிட்டார். ஆனால் அந்த முகவரிகள் திடீரென்று மூடப்பட்டதால் சென்னையில் உள்ள லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவுக்கு ஊழல் ஆதாரங்களை அனுப்பும்படி வற்புறுத்தினார்.

நேற்று முன்தினம் பெரம்பலூரில் சத்துணவு முட்டையில் ஊழல் நடந்து இருப்பதை தனது ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டதாக தகவல் வெளியிட்டார்.

தற்போது மீண்டும் புதிய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-

“டாக்டர் நீர் சொன்னீர். வழிமொழிகிறேன். முந்திச்செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா?”

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Next Story