தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது? மத்திய அரசு அறிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை டிசம்பர் 31-ந் தேதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்பட உள்ளது என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. எனவே இதுதொடர்பான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினேன். இதுவரை உரிய பதில் இல்லை.
எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை உடனடியாக அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர், எய்ம்ஸ் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று பாஸ்கர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 31.10.2014 அன்று மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள பெருந்துறை (ஈரோடு மாவட்டம்), செங்கல்பட்டு (காஞ்சீபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) ஆகிய இடங்களை மத்திய அரசின் குழு 22.4.2015 முதல் 25.4.2015 வரை நேரில் பார்வையிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க மத்திய அரசு சார்ந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கவும், அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைய உள்ளது என்ற அறிவிப்பு 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தையும், அதற்கான பணிகள் தொடங்குவது குறித்தும் வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Tags :
Next Story