மெரினாவில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது
காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை – ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலை நிறுவப்பட்டது.
இந்த நிலையில், காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது. அகற்றப்படும் சிலையானது அடையாறியில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கபட உள்ளது. சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தமிழக அரசும் ஒப்புக்கொண்டது.
சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிலையை இடமாற்றம் செய்ய எந்த தடையும் இல்லை என ஜூலை 18-ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது.

Related Tags :
Next Story