அணிகள் இணைப்பு : எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


அணிகள் இணைப்பு : எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 3 Aug 2017 11:40 AM IST (Updated: 3 Aug 2017 11:39 AM IST)
t-max-icont-min-icon

அணிகள் இணைப்பு தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு ஊழல்அரசு என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. அ.தி.மு.க.வின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள்தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதிகாரபூர்வமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவர்களாகவே பேசிகொண்டு இருக்கிறார்கள்.  அணிகள் இணைப்பு தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story