பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனைகள் வருவது இயல்பு தான் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது இயல்பு தான் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
குவாரி முறைகேடு விவகாரம் தொடர்பாக சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நிறைவு பெற்றது. குவாரிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது இயல்பு தான். வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். என்னை பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story