குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றபோது நடிகர் தனுஷ் கேரவனுக்காக மின்சாரம் திருட்டு


குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றபோது நடிகர் தனுஷ் கேரவனுக்காக மின்சாரம் திருட்டு
x
தினத்தந்தி 4 Aug 2017 12:17 AM IST (Updated: 4 Aug 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்காபுரத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவில் உள்ளது.

தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்காபுரத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி நேற்று தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா, தந்தை கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோருடன் இந்த கோவிலுக்கு சென்றார்.

அப்போது தனுஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பயன்படுத்திய கேரவன் பஸ்சுக்கு, முத்துரெங்காபுரம் கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்சார வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

பின்னர் கேரவன் பஸ் டிரைவர் திண்டிவனத்தை சேர்ந்த வீரப்பன் மற்றும் தனுசுடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீரப்பனுக்கு ரூ.15 ஆயிரத்து 760 அபராதம் விதிக்கப்பட்டது. மின்சார வாரிய அதிகாரிகள் அங்கு வருவதற்கு முன்பே, தனுஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து கார்களில் புறப்பட்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story