விஜயபாஸ்கரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை வழக்கை அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைக்க முடிவு
விஜயபாஸ்கரிடம் 3-வது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை,
பணப்பட்டுவாடா, குட்கா ஊழல் மற்றும் குவாரி உள்ளிட்ட பிரச்சினைகளில் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றுள்ள ஆவணங்களின் அடிப்படையில் 3-வது முறையாக அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு அமலாக்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அப்போது வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்கள் அதே துறையில் உள்ள புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, மனைவி ரம்யா, உதவியாளர் சரவணன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்கு பிறகு, கல்குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் எடுத்தல், குட்கா-பான் மசாலா ஊழல் போன்ற புகார்கள் அடிப்படையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் மீண்டும் 2-வது முறையாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி ஜூலை மாதம் 21-ந் தேதி ஆஜராக வருமான வரித்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதைத்தொடர்ந்து நேரில் ஆஜரான விஜயபாஸ்கரிடம் பல மணிநேரம் விசாரணை நடந்தது.
டாக்டர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார், உதவியாளர் சரவணன் ஆகியோரும் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டாக்டர் விஜயபாஸ்கர் வீடு, குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து பல்வேறு சந்தேகங்கள் குறித்து தெளிவு பெற டாக்டர் விஜயபாஸ்கரிடம் மீண்டும் 3-வது முறையாக விசாரணை நடத்த வருமானவரித்துறை திட்டமிட்டது.
‘நீட்’தேர்வு தொடர்பாக டெல்லியில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முகாமிட்டு இருந்ததால் அவரிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. கடந்த திங்கட்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு அவகாசம் அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதால், நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமானவரித்துறை அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது.
அதன்படி நேற்று மாலை 5.45 மணிக்கு டாக்டர் விஜயபாஸ்கர் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் குட்கா மற்றும் காண்டிராக்டர் சேகர்ரெட்டியுடன் உள்ள தொடர்பு குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பி, அவரின் பதிலை பெற்றுக்கொண்டனர். ஆவணங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள சொத்துகள் எந்த ஆண்டில், எந்த அடிப்படையில் வாங்கப்பட்டன என்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இவற்றிற்கெல்லாம் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். டாக்டர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரும் நேற்று மதியம் 3.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
3 முறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த வழக்கு அமலாக்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்படைக்கும் பட்சத்தில் அமலாக்கப்பிரிவினர் விரைவில் விசாரணையை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story