‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு
‘பெப்சி’ தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.
சென்னை,
‘ரஜினிகாந்த், கமல்ஹாசன் வேண்டுகோளை ஏற்று 3 நாட்களாக நடந்த ‘பெப்சி’ தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் இன்று முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.
சம்பள பிரச்சினையில் பட அதிபர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பெப்சியுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று தயாரிப்பாளர்கள் அறிவித்து வெளியாட்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்தினார்கள். இதற்கு பெப்சி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படம் உள்பட 35-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. நேற்றும் 3-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள், பட அதிபர்களும் பெப்சி தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணும்படி அறிவுறுத்தினர். இயக்குனர்களும் வேலை நிறுத்தத்தை கைவிடும்படி வற்புறுத்தினர்.
இதைத்தொடர்ந்து பெப்சி நிர்வாகிகளின் அவசர கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பெப்சியில் இடம்பெற்றுள்ள 23 அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். கூட்டம் முடிந்ததும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
“தயாரிப்பாளர்கள் பெப்சியுடன் வேலை செய்ய முடியாது என்று தன்னிச்சையாக அறிவித்தனர். சம்பளமும் குறைக்கப்பட்டது. இதனால் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தொழிலாளர் நலத்துறையை அணுகி பட அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மனு அளித்தோம்.
நாளை (இன்று) முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மதம் தெரிவித்து உள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் அவரால் கலந்துகொள்ள இயலாது என்றும் மற்ற நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்றும் தெரிவித்து உள்ளனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி வற்புறுத்தி உள்ளனர். டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் எங்களை தொடர்பு கொண்டு வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெப்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நாளை (இன்று) முதல் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு நடத்தும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.
வேலை நிறுத்தம் காரணமாக படஅதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வருமானம் இழந்து நின்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் இழப்பு ஏற்பட்டது. 37 படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. எனவேதான் வேலைக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
நடிகர் விஷால் விளக்கம்
பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறியதாவது:-
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி பெப்சியுடனும், வேறு எந்த அமைப்புடனும் வேலை செய்வோம் என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story