குண்டர் சட்டத்தில்மாணவியை கைது செய்ததை எதிர்த்து வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
குண்டர் சட்டத்தில்மாணவியை கைது செய்ததை எதிர்த்து வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை,
சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரத்தை வினியோகித்து, மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக இவர் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வளர்மதியை கடந்த ஜூலை 12-ந்தேதி, சேலம் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு சிறையில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வளர்மதியின் தந்தை மாதையன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர், இந்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளர், சேலம் போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story