காவிரியில் தண்ணீர் இல்லாததால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா
காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பம்பு செட்டில் மக்கள் நீராடினர்.
தஞ்சை
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இதில் ஆடி மாதம் 18–ந்தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா காவிரி கரையோர பகுதியில் காலம், காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை பொய்த்து விட்டது. மேட்டூர் அணையிலும் போதிய தண்ணீர் இல்லை. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காததாலும் ஆறுகளும் வறண்டு காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. இதனால் காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் பம்பு செட்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த பம்பு செட்டில் மக்கள் நீராடி, படியில் வாழை இலை போட்டு, அதில் தேங்காய், பழவகைகள், மஞ்சள், குங்குமம், காதோலை கருகமணி, அரிசி உள்பட மங்கல பொருட்களை வைத்து படையலிட்டு பூஜை நடத்தினர். அதன் பின்னர் மஞ்சள்கயிற்றை சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிந்து கொண்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதை தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது.
தஞ்சை
இதே போல தஞ்சை பெரியகோவில் அருகே புதுஆற்றில் தேங்கி கிடந்த சாக்கடை நீரில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். புதுமணத்தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை எடுத்து வந்து ஆற்றில் தேங்கிக்கிடந்த சாக்கடை கலந்த நீரில் போட்டனர். வீட்டில் இருந்து பாட்டிலில் எடுத்து வந்த தண்ணீரை தலையில் தெளித்து புதுமணத்தம்பதிகள் வழிபாடு செய்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த படித்துறையில் காவிரி தாய்க்கு வாழை இலையில் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனைஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணிமாலை, வளையல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டனர். கன்னிப்பெண்கள் தமக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல மணமகன் அமைய வேண்டியும் படித்துறை அருகில் உள்ள அரசமரங்களில் மஞ்சள் கயிறு கட்டி அங்கிருந்த விநாயகரையும் வழிபட்டனர். அதை தொடர்ந்து சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி, மற்றும் பழவகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

Related Tags :
Next Story