கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி


கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி
x
தினத்தந்தி 4 Aug 2017 12:13 PM IST (Updated: 4 Aug 2017 12:13 PM IST)
t-max-icont-min-icon

கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சென்னை

அ.தி.மு.க. அம்மா அணி யில் உள்ள 122 எம்.எல்.ஏ.க் களில் பெரும்பாலானவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், 37 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் தலைமையிலும் செயல்பட்டு வருகிறார்கள்.

கட்சியையும், ஆட்சியையும் யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பதில் இவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடிக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பலப்பரீட்சையால் அ.தி.மு.க. அம்மா அணியில் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் கவலையோடும் வேதனையோடும் இந்த பரபரப்பு நிகழ்வுகளை உற்றுப் பார்த்து வருகிறார்கள்.

இதையடுத்து தினகரன் முதலில் தலைமைக் கழகத்துக்கு வராமல் மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. 4 கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தினகரன், முதலில் தெற்கு மண்டலத்தில் தனது பயணத்தை துவங்குகிறார்.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை தினகரன் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியில் தலைமைக் கழகம் வருவார் என்கிறார்கள். நல்ல நாள் பார்த்து கட்சி ஆபிஸ் வர அவர் நினைக்கிறாராம்.

அப்போது அவருக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தால், தனது அணி  எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்கும் அதிரடி முடிவை டி.டி.வி. தினகரன் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய தகவல்களால் அ.தி.மு.க. அம்மா அணியில் சலசலப்பு அதிகரித்து வருகிறது.

Next Story