அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது நாஞ்சில் சம்பத் பேட்டி

சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி பற்றிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை நேற்று சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு பிறகு, வெளியே வந்த நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளில் டி.டி.வி.தினகரன் ஈடுபட்டு வருகிறார்.
தலைமைக் கழகத்துக்கு டி.டி.வி.தினகரன் நிச்சயம் வருவார். அவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர். கட்சியின் பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில், இந்த கட்சியின் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான சகல அதிகாரமும் டி.டி.வி.தினகரன் என்கின்ற துணைப்பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது. இதில், வேறு யாரும் தலையிடவோ, அத்து மீறவோ, கேள்வி கேட்கவோ அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– அதிகாரம் எல்லாம் டி.டி.வி.தினகரனுக்கு இருப்பதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் அவர் இன்னும் ஏன் கட்சி அலுவலகம் சென்று கட்சிப் பணிகளை தொடங்காமல் இருக்கிறார்?.
பதில்:– ஒரு பொன்மாலை பொழுதுக்காக காத்திருக்கிறோம்.
கேள்வி:– அனைத்து அதிகாரமும் துணைப் பொதுச் செயலாளருக்கு உண்டு என்று சொல்கிறீர்கள். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கேட்டதற்கு, ‘அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளரோ, துணைப் பொதுச் செயலாளரோ இல்லை. அந்தப் பிரச்சினை தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது’ என்று பதில் வந்திருக்கிறதே?.
பதில்:– தேர்தல் ஆணையமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது. கட்சியின் பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம். பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர். ஒருவரை நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் பொதுச் செயலாளருக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது.
கேள்வி:– டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வந்தால், அவரை கைது செய்வதற்கான ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறதே?.
பதில்:– அப்படி எல்லாம் கைது செய்ய முடியாது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தலைமை கழகத்துக்கு வருவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.
கேள்வி:– ஆட்சியையும், கட்சியையும் முதல்–அமைச்சரே பார்த்துக் கொள்வார் என்று அமைச்சர்கள் கூறுகிறார்களே?.
பதில்:– அமைச்சர்கள் என்று சொல்லாதீர்கள். அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார் என்று சொல்லுங்கள். ஜெயக்குமார் இன்னும் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது.
கேள்வி:– ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
பதில்:– அதுவும் ஒரு பொன்மாலை பொழுதில் நடக்கும்.
கேள்வி:– எந்த பொன்மாலை பொழுதில்?.
பதில்:– அது நடக்கும்.
கேள்வி:– எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் 10–ந் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறாரே?.
பதில்:– ஊழல் அரசு என்று பன்னீர்செல்வம் அறிவித்த அந்த நிமிடத்தில் இருந்து சேகர்ரெட்டி தூக்கம் வராமல் தவிப்பதாக தகவல்.
கேள்வி:– மத்திய பா.ஜ.க. அரசுடன் ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து கொண்டு டி.டி.வி.தினகரனை முடக்க நினைப்பதாக கூறப்படுகிறதே?.
பதில்:– அவரை எப்படி முடக்க முடியும். காற்றை யாராவது கைது செய்ய முடியுமா?.

Related Tags :
Next Story